உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நடைப்பாதையில் வழிந்தோடும் கழிவுநீர் நகராட்சி நிர்வாகம் அலட்சியம்

நடைப்பாதையில் வழிந்தோடும் கழிவுநீர் நகராட்சி நிர்வாகம் அலட்சியம்

ஊட்டி;ஊட்டி கமர்சியல் சாலையில் இரண்டு நாட்களாக வெளியேறும் கழிவு நீரால் கடும் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட கமர்சியல் சாலை பிரதான சாலை என்பதால் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். அப்பகுதிகளில் உள்ள ஷோரூம்களில் ஷாப்பிங் செய்யவும் சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வருகை தருகின்றனர். அங்குள்ள குடியிருப்பு, வணிக நிறுவனங்களிலிருந்து பாதாள சாக்கடைக்கு செல்லும் கழிவுநீர் பாதையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் முழுவதும் மக்கள் பயன்படுத்தும் நடைப்பாதை வழியாக பிரதான சாலையில் வெளியேறுகிறது. நடைபாதையில் நடக்கும் மக்கள் முகம் சுளிக்கும் வகையில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. கடந்த இரண்டு நாட்களாக வெளியேறும் கழிவுநீர் குறித்து பொதுமக்கள் நகராட்சிக்கு புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி