உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தையல் பயிற்சி மைய பெண்களுக்கு யோகா பயிற்சி

தையல் பயிற்சி மைய பெண்களுக்கு யோகா பயிற்சி

பந்தலுார்:பந்தலுார் பகுதியில், 'ஏகல் கிராமோதன்' அறக்கட்டளை சார்பில் செயல்படும் தையல் பயிற்சி நிலையத்தில், பெண்களுக்கு யோகா பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தையல் பயிற்சி ஆசிரியர் ராஜேஸ்வரி வரவேற்றார். யோகா இணை பேராசிரியர் விஜயா, பயிற்சியாளர் சுலோச்சனா ஆகியோர் பெண்கள் எளிதாக மேற்கொள்ளும் யோகா குறித்த பயிற்சி அளித்தனர். அதில், பெண்கள் கோபத்தை கட்டுப்படுத்தி, குடும்பத்தை அனுசரித்து குழந்தைகளின் எதிர்காலத்தை பலம் உள்ளதாக மாற்றுவதற்கான வழியை உருவாக்கும் யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டது. மேலும், கோலப்போட்டி, ஓவியம் மற்றும் பெண்களுக்கு இசை நாற்காலி, பாடல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், தையல் பயிற்சி பெண்கள் பங்கேற்று பயன் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை