மேலும் செய்திகள்
ராணுவ போர் தளவாட பொருட்களுக்கு ஆயுத பூஜை
8 hour(s) ago
கோவிலில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சி அசத்தல்
8 hour(s) ago
காமராஜர் சதுக்கத்தில் காந்தி ஜெயந்தி விழா
9 hour(s) ago
குன்னுார்: குன்னுார்-- ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் வாடகைக்கு இயக்க, மேட்டுப்பாளையத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது. நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயிலில் (என்.எம்.ஆர்.,) பயணம் செய்ய சர்வதேச சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். மேட்டுப்பாளையம்-குன்னுார் -ஊட்டி இடையே மலை ரயிலில் முன்பதிவு செய்து இயக்கப்படுகிறது.கோடை சீசனுக்காக வெள்ளி முதல் திங்கள் வரை, 4 நாட்களில், மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தனியாக ரயிலை வாடகைக்கு எடுத்து வருகின்றனர்.இந்நிலையில், வரும் வாரத்தில் குன்னுார்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரயிலை தனியாக வாடகைக்கு எடுத்து செல்ல உள்ளது. இதை தொடர்ந்து, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுாருக்கு நேற்று சிறப்பு மலை ரயில் கொண்டு வரப்பட்டது. மூன்று பெட்டிகளுடன், ரயில் நிலையத்தின் முதல் பிளாட்பாரத்தின் கடைசி பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
8 hour(s) ago
8 hour(s) ago
9 hour(s) ago