உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பிரேக்ஸ் மேன் இல்லாமல் இயங்கும் சிறப்பு மலை ரயில்: பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

பிரேக்ஸ் மேன் இல்லாமல் இயங்கும் சிறப்பு மலை ரயில்: பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

குன்னுார்:குன்னுார்- ஊட்டி மலை ரயிலில் போதிய 'பிரேக்ஸ்மேன்' இல்லாமல் தொடர்ந்து இயக்கப்படுவதால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.ஊட்டி, குன்னுார் மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயிலில் பயணம் செய்ய சர்வதேச சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். நூற்றாண்டுகளாக இயக்கப்படும் இந்த மலை ரயில் மலை பகுதிகளில் குறிப்பிட்ட அளவு தாழ்வாக செல்வதால், 15 கி.மீ.. வேகத்தில் மட்டுமே இயக்கப்படுகிறது.பெட்டியில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு பெட்டிலும் பிரேக் பிடித்து இயக்கப்படுகிறது. இதற்காக அனைத்து பெட்டியிலும் ஒரு பிரேக்ஸ் மென் பணியில் இருப்பது வழக்கம்.இந்நிலையில், சிறப்பு மலை ரயில்களில், 2 மற்றும் 4ம் பெட்டிகளில் பிரேக்ஸ்மேன் இல்லாமல் இயக்கப்படுகிறது. கடந்த வாரம் இயக்கப்பட்ட மலை ரயலில் திடீரென, 40 கி.மீ., வேகத்தில் வந்த போது ரயிலில் அனைத்து பெட்டிகளிலும் பிரேக்ஸ்மேன்கள் இருந்து பிரேக் பிடித்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலையில் இயக்கப்பட்ட 'சார்ட்டட்' ரயில் மற்றும் மாலை நேர ரயில்கள் பிரேக்ஸ்மேன் இல்லாமல் இயக்கப்பட்டன.ரயில்வே முன்னாள் ஊழியர்கள் கூறுகையில்,'ஆங்கிலேயர் காலத்து ரயில் பெட்டிகள், 12 டன் கொண்டது. தற்போது, 'ஐசிஎப்' தொழிற்சாலையில் தயாரித்த பெட்டிகள், 18 டன் ஆகும். அதிக எடை கொண்ட பெட்டிகளில் பிரேக்ஸ் மேன் இல்லாமல் இயக்கப்பட்டால் விபத்து அபாயம் உள்ளது. தற்போது சிறப்பு ரயில்கள் அனைத்தும் அதிக கட்டணம் வசூலித்து பிரேக்ஸ் மேன் இல்லாமலேயே இயக்கப்படுவதால் பயணிகளின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. இங்கு, 18 பிரேக்ஸ் மேன் உள்ள போதும் சிறப்பு ரயில்களில் பிரேக்ஸ் மேன் இல்லாமல் இயக்குவது பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது. எனவே ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ