மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
-நிருபர் குழு-ஆடி வெள்ளியை முன்னிட்டு, அன்னுார் வட்டாரத்தில், அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னுார் தென்னம்பாளையம் ரோட்டில் உள்ள மாரியம்மன் மற்றும் அங்காளம்மன் கோவிலில், நேற்று அம்மனுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.ஓதிமலை ரோட்டில் உள்ள பெரிய அம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது.அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள அருந்தவச் செல்வி அம்மன் சன்னதியில் அம்மனுக்கு பால், தயிர், நெய், உள்ளிட்ட 16 திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கார பூஜை நடந்தது. அன்னுார் சின்னம்மன் கோவில், பிள்ளையப்பம்பாளையம் செல்வநாயகி அம்மன் கோவில், எல்லப்பாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவில், குருக்கம்பாளையம், கணேசபுரம், குன்னத்துார் உள்ளிட்ட ஊர்களில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று ஆடி வெள்ளியை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சூலுார் அடுத்த ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் கோவில், பொன்னாண்டாம்பாளையம் அங்காளம்மன் கோவில், கணியூர் மாகாளியம்மன் கோவில், அப்பநாயக்கன்பட்டி சக்தி மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில் பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
03-Oct-2025