மேலும் செய்திகள்
ராணுவ போர் தளவாட பொருட்களுக்கு ஆயுத பூஜை
02-Oct-2025
கோவிலில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சி அசத்தல்
02-Oct-2025
காமராஜர் சதுக்கத்தில் காந்தி ஜெயந்தி விழா
02-Oct-2025
ஊட்டி;நீலிகிரி மாணவர்கள், சிறப்பு பயிற்சி முகாமில் பங்கேற்க, மலை வாசஸ்தலமான கொடைக்கானலுக்கு சென்றனர்.பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் செலவழிக்கும் வகையில், பள்ளிக் கல்வித்துறை, சிறப்பு பயிற்சி முகாம்களை, மலை மாவட்ட சுற்றுலா மையங்களில் நடத்தி வருகிறது.பள்ளி கல்வியை தவிர்த்து, மாணவர்களுக்கு தலைமைத்துவம், மனித உரிமை, சமூக நீதி மற்றும் பெண்ணுரிமை ஆகியவற்றை வளர்க்கும் பொருட்டு, பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.அரசு பள்ளிகளில் பிளஸ்-1 முடித்த மாணவர்களில், கல்வி, வினாடி வினா, அறிவியல் மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் சிறந்த மாணவர்கள் இதில் பங்கேற்கின்றனர்.நடப்பாண்டு, இந்த சிறப்பு பயிற்சி முகாம், ஏற்காடு, கொல்லிமலை, கொடைக்கானல் மற்றும் குற்றாலம் ஆகிய நான்கு இடங்களில் நேற்று துவங்கி, 8ம் தேதி வரை நடக்கிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்ட மாணவர்கள், கொடைக்கானலுக்கு புறப்பட்டு சென்றனர்.
02-Oct-2025
02-Oct-2025
02-Oct-2025