மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
பந்தலுார்: கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில், தமிழக பா.ஜ., நிர்வாகிகள் ஆய்வு செய்தனர்.கேரளா மாநிலம் வயநாடு மேப்பாடி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதில், பல்வேறு கிராமங்கள் மண்ணில் புதைந்தன. 400க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில், பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலை அறிவுரையின் பேரில், பாதிக்கப்பட்ட பகுதிகளை, மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், நீலகிரி மாவட்ட தலைவர் மோகன்ராஜ், வயநாடு மாவட்ட தலைவர் பிரசாந்த் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர். சூரல்மலை பகுதியில் குடியிருப்புகள் பாதிக்கப்பட்ட மற்றும் மனித உயிர்கள் பலியான பகுதிகளுக்கும் சென்றனர். 10-ம் தேதி பிரதமர் மோடி வயநாடு வர உள்ள நிலையில், பா.ஜ., நிர்வாகிகள் அங்கு சென்றது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
03-Oct-2025