மேலும் செய்திகள்
ராணுவ போர் தளவாட பொருட்களுக்கு ஆயுத பூஜை
02-Oct-2025
கோவிலில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சி அசத்தல்
02-Oct-2025
காமராஜர் சதுக்கத்தில் காந்தி ஜெயந்தி விழா
02-Oct-2025
கூடலுார்: வீடுகளில் விரிசல் ஏற்பட்ட கோக்கால் பகுதி மக்கள், மழைக்காலங்களில் தங்க வசதியாக வருவாய் துறையினர் தற்காலிக முகாம் அமைத்துள்ளனர்.மேல்கூடலூர், கோக்கால் அருகே, கடந்த மாதம் பெய்த கனமழைக்கு, குடியிருப்பு பகுதியில் வீடுகள், சாலைகளில் விரிசல் ஏற்பட்டது. அப்பகுதியை வருவாய் மற்றும் பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்தனர். விரிசல் ஏற்பட்ட வீடுகளில் குடியிருந்தவர்கள், அச்சத்துடன் வெளியேறி வருகின்றனர்.மழை அவ்வப்போது பெய்து வருவதால் அங்குள்ள மக்களின் நலன் கருதி, மாவட்ட நிர்வாகம் உத்தரவுப்படி, கூடலுார் வருவாய் துறையினர் அப்பகுதியில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.கூடலுார் தாசில்தார் அறிக்கை:புவியியல் துறை அறிவுரைப்படி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தற்காலிக முகாமில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோக்கால் பகுதி மக்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.மழையினால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டால், கூடலூர் வி.ஏ.ஓ., - 9385243552, வருவாய் ஆய்வாளர் - 8610588152, தாசில்தார் -- 9445000557, ஆர்.டி.ஓ., - 9445000437 ஆகியோரை தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
02-Oct-2025
02-Oct-2025
02-Oct-2025