மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகள் கேட்டு மக்கள் காத்திருப்பு போராட்டம்
6 hour(s) ago
யானை தாக்கியதில் ஒருவர் காயம்
6 hour(s) ago
கருமத்தம்பட்டி, - மக்களுடன் முதல்வர் திட்ட முகாம், கணியூர் ஊராட்சி ஊஞ்சப்பாளையத்தில் இன்று நடக்கிறது.ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை, முதல்வர் இன்று தருமபுரி மாவட்டத்தில் துவக்கி வைக்கிறார். இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்ட முகாம் இன்று நடக்கிறது. கோவை மாவடத்துக்கான முகாம், சூலூர் ஒன்றியம் கருமத்தம்பட்டி அடுத்த, கணியூர் ஊராட்சி, ஊஞ்சப்பாளையத்தில் உள்ள எஸ்.என்.கே., மண்டபத்தில் இன்று காலை, 10:00 மணிக்கு துவங்கி, மாலை, 3:00 மணி வரை நடக்க உள்ளது. வரும், 14 ம்தேதி முதல், செப்., 14 ம்தேதி வரை அனைத்து ஊராட்சிகளிலும், 62 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மின்சாரம், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி, கூட்டுறவு, வீட்டு வசதி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை தொகை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, ஆதி திராவிடர், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற உள்ளனர்.பொதுமக்கள் தவறாது பங்கேற்று மனுக்களை அளித்து தீர்வு காண அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
6 hour(s) ago
6 hour(s) ago