மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
குன்னுார்:குன்னுார் மூணு ரோடு பகுதியில் டன் கணக்கில் கொட்டப்பட்ட குப்பைகளில் ஏற்பட்ட தீயை தீயணைப்புத் துறையினர் அணைத்தனர்.குன்னுார் நகராட்சியில், 30 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைஓட்டுப்பட்டறை குப்பை மேலாண்மை பூங்காவில் கொண்டு சென்று கொட்டப்பட்டு, தரம் பிரிக்கப்படுகிறது. எனினும் சில இடங்களில் வனப்பகுதிகளிலும், சாலையோர பகுதிகளிலும் குப்பை கொட்டப்படுகின்றன.இந்நிலையில் குன்னுார் ஓட்டுப்பட்டறை மூணு ரோடு பகுதியில் டன் கணக்கில் கொட்டப்பட்ட குப்பை அகற்றப்படாமல் உள்ளது. இங்கு கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கத்தால் குப்பைகள் தீப்பிடித்து வருகிறது. தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், வெளியிடங்களில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து தீயை தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.இப்பகுதி மக்கள் கூறுகையில், 'இங்கு டன் கணக்கில் கொட்டப்பட்ட குப்பைகளால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுற்றுப்புற சுகாதாரமும் பாதிக்கப்பட்டு வருகிறது.நகராட்சிக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதற்கான தீர்வு காணவில்லை. சாலையோரங்களில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
03-Oct-2025