உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்; சுற்றுலா பயணிகள் வியப்பு

நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்; சுற்றுலா பயணிகள் வியப்பு

கூடலுார் : கூடலுார் நடுவட்டம் ஊக்கர் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம், மைசூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணிக்கும் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.கூடலுார் முதுமலை புலிகள் காப்பகம், நடுவட்டம் பகுதிகளில் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், வனப்பகுதி பசுமைக்கு மாறி, நிலத்தடி நீர் உயர்ந்து வருவதுடன், இங்குள்ள பாண்டியாறு-புன்னம்புழா, மாயாறு ஆறுகள், அதன் கிளை ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதிலுள்ள நீர்வீழ்ச்சிகளில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சி, உள்ளூர் மக்களையும், சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.இந்நிலையில், நடுவட்டம், ஊக்கர் மலை நீர்வீழ்ச்சியில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சி, மைசூரு தேசிய நெடுஞ்சாலை தொரப்பள்ளி வழியாக முதுமலை பயணிக்கும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.வனத்துறையினர் கூறுகையில், 'கிளன்மார்கன் பகுதியிலிருந்து வரும் தண்ணீர், ஊக்கர் மலைப்பகுதியில் நீர்வீழ்ச்சியாக காட்சி தருகிறது. தற்போது பெய்து வரும் பருவ மழையில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சியை சுற்றுலாப் பயணிகள் ரசித்து செல்கின்றனர்,' என்றனர்.மக்கள் கூறுகையில், 'இந்த நீர்வீழ்ச்சியின் அழகை சுற்றுலா பயணிகள் முழுமையாக ரசித்து செல்லும் வகையில், தொரப்பள்ளி கோடமுலா சாலையில் கண்காணிப்பு கோபுரம் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி