உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தலைவரே இல்லாமல் தள்ளாடும் ஊராட்சி

தலைவரே இல்லாமல் தள்ளாடும் ஊராட்சி

சூலுார் : தலைவரே இல்லாமல், நிர்வாகத்தின் பதவி காலம் முடிவதால், காங்கயம்பாளையம் ஊராட்சி மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்டது. காங்கயம்பாளையம் ஊராட்சி. இங்கு தலைவராக இருந்த கந்தசாமி, உடல்நலக்குறைவால், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். அன்றிலிருந்து தலைவர் பதவி காலியாக உள்ளது. வட்டார வளர்ச்சிஅலுவலர், தனி அலுவலராக பொறுப்பேற்று நிர்வாகம் நடத்தப்பட்டு வருகிறது. தலைவர் இல்லாததால், மக்கள் தங்கள் குறைகளை கூற, அதிகாரி வரும் வரை காத்திருக்கு வேண்டிய நிலை உள்ளது. மேலும், ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் முடங்கி கிடப்பதாக புகார்களும் அதிகரித்துள்ளன. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: உள்ளாட்சி நிர்வாகத்தில் தலைவரோ அல்லது உறுப்பினரோ, இறந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ ஆறு மாதத்துக்குள் தேர்தல் நடத்தி, புதிய தலைவர், உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது உள்ளாட்சி விதி. ஆனால், இங்கு, இரண்டு வருடம் ஆகியும் தலைவர் தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால், அனைத்து பணிகளும் முடங்கியுள்ளன. வரும், டிச., மாதம் உள்ளாட்சி நிர்வாகத்தின் பதவி காலம் முடிய உள்ளது. அதற்குள் தேர்தல் நடக்குமா என, சந்தேகமாக உள்ளது, என்றனர். இதுகுறித்து மக்கள் கூறுகையில்,' ஏதாவது சான்று தேவையென்றால் தலைவரிடம் கையெழுத்து பெற்று வர கூறுகின்றனர். ஆனால், எங்கள் ஊரில் இரு ஆண்டுகளாக தலைவர் இல்லை. உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் நேரடியாக குறைகளை கூறி தீர்வு காணலாம். ஆனால், இங்கு தனி அலுவலர் வந்துதான் எந்த ஒரு முடிவும் எடுப்பார். அதனால், வளர்ச்சி பணிகள் முடங்கி உள்ளன,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ