உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / திருநங்கைகள் பிரச்னை ;சமாதானப்படுத்திய போலீசார்

திருநங்கைகள் பிரச்னை ;சமாதானப்படுத்திய போலீசார்

கூடலுார்;கூடலுார் சாலையோர வியாபாரி விற்பனைக்கு வைத்திருந்த காய்கறிகளை சாலையில் வீசி, திருநங்கைகள் சிலர் பிரச்னை செய்ததால் வியாபாரிகள் அதிருப்தி அடைந்தனர்.கூடலுார் நகரின் மையப்பகுதியில் தங்கராசு,70, என்பவர் சாலையோரத்தில் தள்ளு வண்டியில் காய்கறி விற்பனை செய்து வருகிறார். அப்பகுதிக்கு சென்ற திருநங்கைகள் சிலர், அவர் விற்பனைக்கு வைத்திருந்த பழங்களை எடுத்துள்ளனர். 'அதனை எடுக்க வேண்டாம்' என, தெரிவித்துள்ளார். இதனால், ஏற்பட்ட வாக்குவாத்தின் போது, ஆத்திரமடைந்த திருநங்கைகள், விற்பனைக்கு வைத்திருந்த காய்கறி, பழங்களை சாலையில் வீசி சேதப்படுத்தினர். இது தொடர்பான, 'வீடியோ' வைரலாகியுள்ளது.தொடர்ந்து, கூடலுார் டி.எஸ்.பி., வசந்தகுமார் திருநங்கைகளை அழைத்து விசாரணை மேற்கொண்டார். திருநங்கைகள் குற்றத்தை ஒப்புக்கொண்டு, நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து, நஷ்டஈடு தொகையும் வழங்கினர். அவர்களுக்கு அறிவுரை கூறி, போலீசார் அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி