உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மலையில் பெய்த மழை; சற்று தணிந்த வெப்பம்

மலையில் பெய்த மழை; சற்று தணிந்த வெப்பம்

கூடலுார்;ஊட்டி, கூடலுார் முதுமலை, மசினகுடி, நடுவட்டம் பகுதிகளில் மிதமாக பெய்த மழையினால் வெப்பத்தின் தாக்கம் சற்று தணிந்தது. நீலகிரி மாவட்டம், கூடலுார், முதுமலை பகுதியில் நடப்பு ஆண்டு துவக்கம் முதல், கோடை மழை ஏமாற்றி வந்தது. இதனால், வனப்பகுதிகளில் வறட்சி ஏற்பட்டு வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.மேலும், நீர் ஆதாரங்களில் நீர்வரத்து குறைந்து குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது. தொடரும் வெயிலின் தாக்கத்தால் மக்கள், உடல் சார்ந்து பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர். ஊட்டியில் நேற்று மதியமும், மாலையில், கூடலுார், முதுமலை, மசினகுடி, நடுவட்டம் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால், வெப்பத்தின் தாக்கம் சற்று தணிந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.மக்கள் கூறுகையில், 'நடப்பாண்டு கோடை மழை தொடர்ந்து ஏமாற்றி வந்ததால் கடந்த சில வாரங்களாக, கூடலுார் பகுதியில் சமவெளி போன்று வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இன்று (நேற்று) துவங்கி கோடை மழையினால், வெப்பத்தின் தாக்கம் சற்று தணிந்தது. கோடை மழை தொடரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது,' என்றனர்.கடும் வறட்சியில் சிக்கியுள்ள முதுமலை வனப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரத்தில் சிறிது நேரம் பெய்து வரும் மழையினால், வனத் தீ பிரச்னைக்கு ஓரளவு தீர்வு ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ