மேலும் செய்திகள்
கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு
2 hour(s) ago
கூடலுார்;கூடலுார் புளியம்பாறை அருகே கொல்லுார் கிராமத்துக்கு செல்லும் மண் சாலை சீரமைக்கப்படாததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கூடலுார் புளியம்பாறை கிராமத்தில் இருந்து, கொல்லுார் கொள்ளிக்கள்ளி கிராமத்திற்கு மண்சாலை பிரிந்து செல்கிறது. 1.5 கி.மீ., துாரமுள்ள மண்சாலையில் சில ஆண்டுகளுக்கு முன், 500 மீட்டர் துாரம் சிமென்ட் சாலையாக மாற்றப்பட்டது. மீதமுள்ள பகுதி சீரமைக்கப்படவில்லை. வெயில் காலங்களில் இச்சாலையில் சிறிய வாகனங்கள் சிரமப்பட்டு சென்று வருகிறது.தற்போது, பெய்து வரும் மழையினால் மண்சாலை சேதமடைந்து, வாகனங்கள் இயக்க முடிவதில்லை. இதனால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், பள்ளி கல்லுாரி செல்லும் மாணவர்கள் மண் சாலையில், சிரமப்பட்டு நடந்து சென்று வருகின்றனர். சாலையை, சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வரும் மக்கள், சாலை வசதி இன்றி சிரமப்பட்டு வருகிறோம். மழை காலங்களில், மண் சாலையில் நடந்து செல்வது சிரமமாக உள்ளது.எனவே, அதிகாரிகள் இச்சாலையை ஆய்வு செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர். இப்பகுதியை எம்.எல்.ஏ., ஜெயசீலன் தலைமையில் பலர் ஆய்வு செய்தனர்.
2 hour(s) ago