உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மகா மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

மகா மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் மகா மாரியம்மன் கோவிலில், திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மேட்டுப்பாளையம் காட்டூர் ரயில்வே கேட் அருகில், மிகவும் பழமை வாய்ந்த, மகா மாரியம்மன் கோவில் உள்ளது. கோவில் திருவிழா கடந்த, 14ம் தேதி பூச்சாட்டுடன் தொடங்கியது.நேற்று காலை பொங்கல் வைத்து, சீர் தட்டுகளை கோவிலுக்கு எடுத்து வந்தனர். 9:00 மணிக்கு மண்டபத்தில் சிவனுக்கும், பார்வதிக்கும் திருக்கல்யாணம், தமிழ் முறைப்படி நடந்தது. அப்போது தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், அபிராமி அந்தாதி பாடல்கள் பாடப்பட்டன. சந்திரசேகர சிவனடியார் திருக்கல்யாணம் வைபவத்தை நடத்தினார். கோவில் தலைவர் கிருஷ்ணசாமி அம்மனுக்கு மாங்கல்யத்தை அணிவித்தார். செயலாளர் கார்த்திக், பொருளாளர் உமாசங்கர், அர்ச்சகர் பிரகாஷ் ஆகியோர் திருக்கல்யாண வைபவத்தை நடத்தினர். இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு மாங்கல்யம் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு மாவிளக்கு பூஜை செய்தனர். பின்பு மணிநகர் நாக மாரியம்மன் கோவிலில் இருந்து, அலகு குத்தி வந்த பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

மாரியம்மன் கோவில் திருக்கல்யாணம்

கோவை தடாகம் ரோடு, சோமையனூர் மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. கடந்த, 13ம் தேதி கம்பம் நாட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. விழாவின், முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், ஈசனுடன் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.விழாவையொட்டி, வளையல், பழ வகைகள், இனிப்புகள், தேங்காய், வெற்றிலை, பாக்கு, மிட்டாய், பூ மாலைகள், சேலை உள்ளிட்டவை ஊர்வலமாக பக்தர்கள் எடுத்து வந்தனர்.திருக்கல்யாண நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். குழந்தைகள், பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்தனர். பின்பு எருது அழைத்தல், அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராடுதல், அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை சோமையனூர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ