மேலும் செய்திகள்
பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
10-Oct-2025
வீட்டை இடித்த யானைகள்; வனத்துறையினர் ஆய்வு
10-Oct-2025
ஊட்டி:ஊட்டி அருகே அல்லஞ்சியில், 180 அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக பாரத பிரதமரின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்னும்அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் அனைத்து அடிப்படை வசதிகளுடன் தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. அதன்படி, ஊட்டி அருகே கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட அல்லஞ்சி பகுதியில், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 24.57 கோடி ரூபாயில், 180 அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. புதியதாக கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடி குடியிருப்புகளை நேற்று, எம்.பி., ராஜா, சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்று திறந்து வைத்தனர்.ஒவ்வொரு குடியிருப்பும், 391 ச.அடி பரப்பளவில், 36.39 ச. மீட்டரில் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடியிருப்பும் வரவேற்பறை, ஒரு படுக்கை அறை, ஒரு சமையலறை, குளியலறை, ஒரு கழிவறையுடன் கட்டப்பட்டுள்ளது. கேத்தி பேரூராட்சி மூலமாக குடிநீர் இணைப்பு பெறப்பட்டு இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டி வாயிலாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் வீடு தேவைப்படுபவர்கள் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தை அணுகலாம்.
10-Oct-2025
10-Oct-2025