உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வீடு கட்டுவதற்கு இடம் வாங்க ரூ. 5.98 லட்சம் நிதி உதவி

வீடு கட்டுவதற்கு இடம் வாங்க ரூ. 5.98 லட்சம் நிதி உதவி

ஊட்டி;நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் வீடுகள் கட்ட இடம் வாங்குவதற்கு, 13 பேருக்கு, 5.98 லட்சம் ரூபாய் மதிப்பிலான காசோலையை கலெக்டர் வழங்கினார்.கோத்தகிரி வட்டாரத்திற்கு உட்பட, கடினமாலா ஊராட்சி கொப்பையூர் பழங்குடியின பகுதியில், 13 குடும்பங்கள் வசித்து வருகின்றன. மழை காலங்களில் மக்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை.மக்கள் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, சென்னையை சேர்ந்த ஸ்ரீநிவாச சேவைகள் அறக்கட்டளை சார்பில், ஒரு குடும்பத்திற்கு, தலா, 46 ஆயிரம் ரூபாய் வீதம், வழங்கியதை, கலெக்டர் பயனாளிகளுக்கு காசோலையாக வழங்கினார்.மேலும், பிஎம்., ஜன்மன் திட்டத்தின் கீழ், 13 பழங்குடியின குடும்பங்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கலெக்டர் தெரிவித்தார். அரசு அலுவலர்கள், ஸ்ரீனிவாச சேவைகள் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பயனாளிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ