| ADDED : ஆக 02, 2024 05:36 AM
கோத்தகிரி : கோத்தகிரியில் தன்னார்வலர்களுக்கு 'எழுத்தறிவு திட்டம்' குறித்து, பயிற்சி அளிக்கப்பட்டது.கோத்தகிரி ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவனத்தில், மத்திய அரசின் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், நடந்த பயிற்சி முகாமுக்கு, பயிலக முதல்வர் வசந்தா முன்னிலையில் பயிற்சி அளிக்கப்பட்டது.அதில், 'சாலை பாதுகாப்பின் அவசியம், சாதனை பெண்கள், துாய்மை பாரதம் திட்டத்தின் செயல்பாடுகள், உடல் நலம் பாதுகாப்பின் முக்கியம், முதலுதவி சிகிச்சை அளிப்பதில் உன்னதம், சட்டமும் திட்டமும், எழுத்து - எண்கள் கற்பிக்கும் முறை மற்றும் உடல் நலம் காப்போம்,' என்ற தலைப்புகளில் விவாதம் நடத்தப்பட்டது.பயிற்சியில் பங்கேற்றவர்களில் இருந்து, பல்வேறு சந்தேகங்கள் மற்றும் கருத்துகள் கேட்கப்பட்டு, தேவையான விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், கோத்தகிரி வட்டாரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து, தன்னார்வர்கள் பலர் பங்கேற்று பயனடைந்தனர்.கோத்தகிரி கெங்கரை ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி ஆசிரியை மகேஸ்வரி உட்பட, பலர் பங்கேற்றனர்.