உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி

தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி

ஊட்டி:நீலகிரி தொகுதியில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதில், லோக்சபா தேர்தலை முன்னிட்டு, ஒவ்வொரு ஓட்டு சாவடி மையத்திலும், மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து, கள ஆய்வு செய்து, துறை அலுவலர்களுக்கு தெரிவித்து, பணியை விரைவில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதில், மண்டல அலுவலர்கள், மாற்றுப் பாதையின் வரைப்படத்தை தயாராக வைப்பதுடன், பதட்டமான வாக்கு சாவடி மையங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இதனை, அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.தொடர்ந்து, மண்டல அலுவலர்களுக்கு ஓட்டு பதிவு, ஓட்டு கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் 'விவிபேட்' இயந்திரங்கள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இளம் வாக்காளர்களுக்கு இடையே, வாக்களிப்பதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த ஆலோசிக்கப்பட்டது.மேலும், பேரூராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில்,100 சதவீதம் ஓட்டு பதிவை வலியுறுத்தி, மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கலை நிகழ்ச்சி, மராத்தான் போட்டி, மரக்கன்று நடவு, மனித சங்கிலி, கை எழுத்து இயக்கம் மற்றும் 'செல்பி பாயின்ட்' உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது என முடிவு எடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்