உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பணியின் போது உடல் நலம் பாதிப்பு: நடத்துனருக்கு நடந்த சிகிச்சை

பணியின் போது உடல் நலம் பாதிப்பு: நடத்துனருக்கு நடந்த சிகிச்சை

கூடலுார்;கூடலுார் கொளப்பள்ளியை சேர்ந்தவர் மயில்வாகனம். இவர், கூடலூர் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம், கூடலுார் - அய்யன்கொல்லி அரசு பஸ்சில் பணி வழங்கப்பட்டிருந்தது. பஸ் மாலை, 5:30 மணிக்கு பயணிகளுடன், கோழிக்கோடு சாலை வழியாக அய்யன்கொல்லி சென்றது. பஸ், கோழிப்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது நடத்துனருக்கு இடது கையில் வழிஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனை அறிந்த பயணிகள் சப்தமிட, ஓட்டுனர் பஸ்சை நிறுத்தினர்.தொடர்ந்து, ஓட்டுனர் மற்றும் பயணிகள், அவரை சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள தனியார் கிளினிக்கில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக மேல், கூடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.பயணிகள் கூறுகையில், 'போக்குவரத்து துறையில் ஊழியர் பற்றாக்குறையினால், ஊழியர்களுக்கு பணி சுமை அதிகரித்துள்ளது. இதனால், அவர்கள் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. எனவே காலி பணியிடங்களை நிரப்புவதுடன், தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு, இலவசமாக முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை