உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரியில் தண்ணீர் தட்டுப்பாடு; குடிநீர் தொட்டியில் குளித்து கும்மாளம்

நீலகிரியில் தண்ணீர் தட்டுப்பாடு; குடிநீர் தொட்டியில் குளித்து கும்மாளம்

கோத்தகிரி;கோத்தகிரி அருகே, குடிநீர் தொட்டியில் குளித்து கும்மாளம் போடும், சுற்றுலா பயணிகளால், தண்ணீர் மாசடைந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து, தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது. குடிநீருக்காக, மக்கள் நாள்தோறும் தவம் இருந்து வருகின்றனர். மழை பெய்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும். இந்நிலையில், கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில், தட்டப்பள்ளம் பகுதியில், சுற்றுலா பயணிகள், பிரசாரத்துக்கு வந்த சிலர் தொட்டிக்குள் இறங்கி குளித்தனர்.உள்ளூரை சேர்ந்த சிலர் அவர்களை போட்டோ எடுத்து,' இங்கு குடிநீர் தொட்டியில் குளிக்க தடை உள்ளது; இதனால், தண்ணீர் மாசுபடும்,' என, கூறிய நிலையில், அங்கிருந்தவர்கள் மக்களிடம் தகராறு செய்துள்ளனர். மக்கள் கூறுகையில்,' இப்பகுதியில் குடியிருப்புகளுக்கு குடிக்க பயன்படும் இந்த தண்ணீரில் குளித்தால், நீர் மாசுபடுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் தண்ணீர் தேக்க பகுதியில் தடுப்பு வேலி அமைக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை