உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தாவரவியல் பூங்காவுக்கு வந்த 51 ஆயிரம் சுற்றுலா பயணிகள்

தாவரவியல் பூங்காவுக்கு வந்த 51 ஆயிரம் சுற்றுலா பயணிகள்

ஊட்டி, : ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு, பொங்கல் விடுமுறை நாட்களில், 51 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர்.ஊட்டி தாவரவியல் பூங்கா சிறந்த சுற்றுலா மையமாக விளங்குகிறது. ஆண்டுதோறும், கோடை சீசன் நாட்களில், லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். சாதாரண நாட்களிலும், கணிசமான எண்ணிக்கையில் பார்வையாளர்களின் கூட்டம் இருக்கும்.இந்நிலையில், பொங்கல் தொடர் விடுமுறை காரணமாக, சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து இருந்தது. அதன்படி, கடந்த, 14ம் தேதி முதல், பொங்கல் விடுமுறை இறுதி நாளான நேற்று வரை, நான்கு நாட்களில் மட்டும், தாவரவியல் பூங்காவுக்கு, 51 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.கோவை, திருப்பூர் சமவெளி மாவட்டங்கள் மற்றும் கர்நாடக, கேரளா மாநிலங்களில் இருந்து, நேற்று காலை முதல் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சுற்றுலா துறை சார்பில், பூங்காவில் பொங்கல் விழா கொண்டாடப்பட்ட நிலையில், நிகழ்ச்சிகளை கண்டுக்களித்த சுற்றுலா பயணிகள், இதமான காலநிலையில், உள்ளூர் பார்வையாளர்களுடன் இணைந்து, நடனமாடி மகிழ்ந்தனர். மாலை, 6:00 மணிவரை பூங்காவின் இயற்கை அழகை ரசித்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை