உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / எஸ்.ஐ.ஆர்., பணியில் 52 ஆயிரம் வாக்காளர்கள் நீக்க வாய்ப்பு? படிவங்கள் வழங்கும் பணி நாளை முடிவடைகிறது

எஸ்.ஐ.ஆர்., பணியில் 52 ஆயிரம் வாக்காளர்கள் நீக்க வாய்ப்பு? படிவங்கள் வழங்கும் பணி நாளை முடிவடைகிறது

ஊட்டி: 'நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டசபை தொகுதிகளில், 52 ஆயிரம் வாக்காளர்களை நீக்க வாய்ப்புள்ளது,' என்ற தகவல் வெளியாகி உள்ளது. நீலகிரியில், ஊட்டி, குன்னுார், கூடலுார் ஆகிய மூன்று தொகுதிகளில் வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. அத்துடன், வாக்காளர் அல்லாதவர்களை நீக்கம் செய்வதற்கான பணியும் நடந்து வருகிறது. இதற்கான கணக்கெடுப்பு படிவங்கள் வாக்காளர்களிடம் வழங்கப்பட்டன. வாக்காளர்கள் அவற்றை பூர்த்தி செய்து வழங்கி வருகின்றனர். இப்பணிக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் நாளை முடிவடைகிறது. 52 ஆயிரம் பேர் நீக்கம்? இந்நிலையில், டிச., முதல் வாரம் கணக்கெடுப்பின்படி, நீலகிரியில் உள்ள மூன்று தொகுதிகளில் இறந்தவர்கள், 12 ஆயிரம் பேர், நிரந்தரமாக இடம் மாறி சென்றவர்கள், 40 ஆயிரம் பேர், கண்டுபிடிக்க முடியாதவர்கள், 750 பேரின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளனர். கணக்கெடுப்பு பணி முழுமையாக முடியும்போது, 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது. ஊட்டி, குன்னுார், கூடலுார் சட்டசபை தொகுதிகள் உள்ளன மொத்த முள்ள மூன்று தொகுதிகளில்,'2,79,201ஆண் வாக்காளர்கள்; 3,05,041 பெண் வாக்காளர்கள்; 18 மூன்றாம் பாலினத்தவர்,' என, மொத்தம், 5,84,260 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். வாக்காளர் தீவிர திருத்த பணி நிறைவடையும் தருவாயில், மூன்று தொகுதிகளிலும், பல்லாயிரம் வாக்காளர் நீக்கப்பட்டதால், கடும் தேர்தல் போட்டி இருக்க வாய்ப்புள்ளது. தேர்தல் அதிகாரிகள் கூறுகையில்,'வாக்காளர்கள் படிவங்கள் வினியோகம் நிறைவடைந்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நிரந்தரமாக பூட்டப்பட்ட வீடுகள், வெளிநாடுகளுக்கு, வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து நிரந்தரமாக சென்றவர்களின் வீடுகளுக்கு, இரண்டாவது முறை நேரில் சென்று விசாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மூன்றாவது முறை நேரில் விசாரித்து, அதன் பின்பே இறுதி முடிவு எடுக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களில் எவ்வித குளறுபடிக்கள் இருக்க கூடாது என்பதற்காக எந்த தகவல் தேவைப்பட்டாலும், உடனே அப்பகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ள, ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ