உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆண்டு விழாவில் ஆடி அசத்திய மாணவிகள்

ஆண்டு விழாவில் ஆடி அசத்திய மாணவிகள்

அன்னூர்:பொகலூர் அரசு நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நேற்று முன்தினம் நடந்தது.பொகலூர் அரசு நடுநிலைப்பள்ளி ஆண்டு விழாவில், தலைமை ஆசிரியை கவிதா வரவேற்றார். ஊராட்சித் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா சண்முக வேலாயுதம் முன்னிலை வகித்தார். விழாவில் மாணவ, மாணவியர், நாட்டுப்புற நடனம், கும்மி நடனம் என அசத்தலாக ஆடினர். விளையாட்டுப்போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகளில் அசத்தியவர்கள் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் துரைசாமி, ஊராட்சித் துணைத் தலைவர் சதீஷ்குமார், கல்வி குழு உறுப்பினர் தாமோதரசாமி உள்பட பலர்பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ