உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பள்ளிக்கு வராத பழங்குடி மாணவர்கள்: போலீசார் உதவியுடன் மீண்டும் கல்வி

பள்ளிக்கு வராத பழங்குடி மாணவர்கள்: போலீசார் உதவியுடன் மீண்டும் கல்வி

கூடலுார்;கூடலுார் புளியம்பாறை அரசு உயர்நிலை பள்ளிக்கு வராத பழங்குடி மாணவர்களை போலீசார் உதவியுடன் பள்ளிக்கு அழைத்து வந்து படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டது.கூடலுார் அரசு பள்ளியில் பயின்று வரும் பழங்குடி மாணவர்கள் பலர் பள்ளிக்கு தொடர்ச்சியாக வருவதில்லை; பல மாணவர்கள் படிப்பை தொடராமல் நின்று விடுகின்றனர். தொடர்ச்சியாக பள்ளிக்கு வந்து செல்லவும், இடை நிற்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க கல்வித்துறை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.கூடலுார் புளியாம்பாறை அரசு உயர்நிலை பள்ளியில், கல்வி பயின்று வரும் காபிகாடு, கோழிகொல்லி பழங்குடி கிராமத்தை சேர்ந்த, 10ம் வகுப்பு படிக்கும் மாணவி உள்ளிட்ட, 6 பேர் தொடர்ச்சியாக பள்ளிக்கு வருவதில்லை. ஆசிரியர்கள் அவ்வப்போது அவர்கள் வீடுகளுக்கு சென்று, பள்ளி அழைத்து வந்தனர்.கடந்த சில வாரங்களாக அவர்கள் தொடர்ச்சியாக பள்ளிக்கு வரவில்லை. இதில், ஒரு மாணவி 10ம் வகுப்பு படித்து வருபவர். இந்நிலையில், நேற்று முன்தினம், ஆசிரியர்கள் அப்பகுதிக்கு சென்று, மாணவர்களை பள்ளிக்கு அழைத்துள்ளனர். பள்ளிக்கு வருவதாக கூறியவர்கள் நேற்று, பள்ளிக்கு வரவில்லை.இந்நிலையில், பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர், கூடலுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., உஷாதேவி, காவலர் அழகரசி மற்றும் ஆசிரியர்கள், பழங்குடியினர் கிராமங்களுக்கு சென்று, பள்ளிக்கு செல்லாத ஆறு மாணவர்களையும் சந்தித்து, கல்வியின் அவசியம் குறித்து எடுத்துக் கூறி, பள்ளிக்கு அழைத்து வந்தனர். அழைத்து வரப்பட்டதால் 10ம் வகுப்பு மாணவி செயல்முறை தேர்வில் பங்கேற்றார். தொடர்ந்து பள்ளிக்கு வரும்படி, மாணவிகளை போலீசார் அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை