உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / படகு இல்லத்தில் சாகச விளையாட்டு பணி சீசனுக்கு திறக்க நடவடிக்கை

படகு இல்லத்தில் சாகச விளையாட்டு பணி சீசனுக்கு திறக்க நடவடிக்கை

ஊட்டி;ஊட்டி படகு இல்ல சாகச விளையாட்டு கட்டுமான பணிகள் விரைவாக நடந்து வருகிறது.தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்படும், ஊட்டி படகு இல்லத்துக்கு ஆண்டுக்கு, 20 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வரும் காலங்களில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், ' மாபெரும் ஊஞ்சல், ரோலர் கோஸ்டர், பங்கீ ஜம்பிங், தொங்குபாலம்,' உட்பட பல வகையான சாகச விளையாட்டு அம்சங்களை, 5.50 கோடி ரூபாய் மதிப்பீல் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக படகு இல்லத்தின் இருகரைகளில் அடித்தளம் அமைக்கப்பட்டு சாகச விளையாட்டு போட்டிக்கான கட்டுமான பணிகள் விரைவாக நடந்து வருகிறது. தற்போது, தொங்குபாலம் அமைக்கும் பணி, 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது.சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் கூறுகையில், 'சாகச விளையாட்டுகளில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். வரும் காலங்களில், படகு இல்ல குளங்களில் படகு வீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தற்போது இந்த சாகச விளையாட்டுகளுக்கான கட்டுமானப் பணிகள் விரைவாக நடந்து வருகிறது. இதில், தொங்குபாலம் பணி, 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. சீசனுக்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை