மேலும் செய்திகள்
வீட்டை நோட்டமிட்ட கட்டை கொம்பனால் அச்சம்
20-Dec-2025
ஸ்வரலயா நடன சங்கீத உற்சவம் 21ல் துவக்கம்
20-Dec-2025
வட்டார வளர்ச்சி ஒருங்கிணைப்பு கூட்டம்
20-Dec-2025
குன்னூர்;''செயற்கை நுண்ணறிவை சமூக, தேச நலனுக்காக மாணவர்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்,'' என, கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் கோவை சி.எஸ்.ஐ., பிஷப் திமோத்தி ரவீந்தர் பேசினார்.குன்னுார் கேத்தி சி.எஸ்.ஐ., பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கோவை சி.எஸ்.ஐ., பிஷப் மற்றும் கல்லூரியின் இயக்குனர் திமோத்தி ரவீந்தர் தலைமை வகித்து பேசியதாவது: எதிர்காலம் தற்போதைய இளம் தலைமுறையினரிடம் உள்ளது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு செயல்பாட்டிற்கும் இளம் தொழில் நுட்ப வல்லுனர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மனிதர்களை போலவே சிந்திக்கவும் செயல்படவும் திட்டமிடப்பட்ட இயந்திரங்களில், மனித நுண்ணறிவை உருவகப்படுத்தும் செயற்கை நுண்ணறிவு வருங்காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும். இந்த படைப்பாக்க திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவை சமூக, தேச நலனுக்காக மாணவர்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். '' என்றார்.விழாவில் 165 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. இதில் முதுநிலை பிரிவில் 4 பேரும், இளங்கலை பிரிவில் 5 பேரும் தங்கப்பதக்கம் வென்றனர்.முன்னதாக, தாளாளர் காட்வின் வரவேற்றார். கல்லூரி மாணவ மாணவியர் பெற்றோர் திரளாக பங்கேற்றனர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.
20-Dec-2025
20-Dec-2025
20-Dec-2025