உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தாவரவியல் பூங்காவில் பேட்டரி கார்

தாவரவியல் பூங்காவில் பேட்டரி கார்

ஊட்டி:நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு ஆண்டுதோறும் தோறும், 35 லட்சம் சுற்றுலா பயணியர் வருகை புரிகின்றனர். நடப்பாண்டு மே மாதம் கோடை விழா துவங்க உள்ள நிலையில், ஊட்டி தாவரவியல் பூங்காவில், ஆறு நாட்கள் மலர் கண்காட்சி நடக்கிறது.இந்நிலையில், முதல் முறையாக தாவரவியல் பூங்கா முழுதும் சுற்றி பார்க்க ஏதுவாக, பேட்டரி கார்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா வரும் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, இது மிகவும் அனுகூலமாக உள்ளதால், மகிழ்ச்சியுடன் பூங்கா அழகை ரசித்து செல்கின்றனர்.பூங்கா நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், 'பேட்டரி கார், வயதான மற்றும் மாற்றுத்திறனாளி சுற்றுலா பயணியருக்கு ஏற்றதாக உள்ளது. பூங்காவை சுற்றி வர நபருக்கு, 30 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணியர் மத்தியில், பேட்டரி காருக்கு வரவேற்பு உள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை