உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  பழுதடைந்த தெரு விளக்கு இரவில் மக்களுக்கு சிரமம்

 பழுதடைந்த தெரு விளக்கு இரவில் மக்களுக்கு சிரமம்

பந்தலுார்: பந்தலுார் அருகே தெருவிளக்கு பழுதடைந்தும், சீரமைக்காததால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பந்தலுார் காலனி பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த பகுதியில், அடிக்கடி சிறுத்தை மற்றும் காட்டு பன்றிகள் நடந்து வருகின்றன. ஊருக்குள் வரும் வன விலங்குகளிடம் பொதுமக்கள் அடிக்கடி உயிர் தப்பி வருகின்றனர். இந்நிலையில், கிராமத்தின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள, தெரு விளக்குகள் பழுதடைந்து பல நாட்கள் ஆகிறது. தெரு விளக்குகள் பழுதால், இரவில் போதிய வெளிச்சம் இன்றி, மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, பழுதடைந்த தெரு விளக்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ