உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  காசி தமிழ் சங்கம் நடத்தும் தமிழ் கற்கலாம் நிகழ்ச்சியில் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்பு

 காசி தமிழ் சங்கம் நடத்தும் தமிழ் கற்கலாம் நிகழ்ச்சியில் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்பு

ஊட்டி: ஊட்டியில் காசி தமிழ்ச் சங்கம் மற்றும் இந்து பனாரஸ் பல்கலைக்கழகம் நடத்தும் 'தமிழ் கற்கலாம்' நிகழ்ச்சியில், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். இந்து பனாரஸ் பல்கலை கழகம் சார்பில், மாநிலம் முழுவதும், 10 நாட்கள் நடைபெறும் தமிழ் கற்கலாம் நிகழ்ச்சியில், 300 மாணவர்கள் பங்கேற்று வருகின்றனர். அதில், கோவை கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியை சேர்ந்த மாணவர்கள், 30 பேர் பங்கேற்று, கோவை உட்பட, பல்வேறு பகுதிகளில், பழங்குடியினர் மக்களின் வாழ்க்கை முறை, கலாசாரம் குறித்து தெரிந்து கொள்வதுடன், 'தமிழ் கற்கலாம்' என்ற தலைப்பில், தமிழ் மொழியின் முக்கியத்துவம் குறித்து, விளக்கி வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக, ஊட்டிக்கு நேற்று வந்திருந்த மாணவர்கள், முத்தநாடு மந்து பகுதியில் தோடர் மக்களின் மொற்பர்த் பண்டிகையில் பங்கேற்றனர். தோடரின மக்களின் தெய்வ வழிபாடு, பூஜை நன்முறை மற்றும் பாரம்பரிய நடன நிகழ்ச்சியை கண்டு களித்து வியந்தனர். கல்லுாரி பேராசிரியர்கள் சந்தோஷ் குமார் மற்றும் சவுந்தர்ராஜன் ஆகியோர், மாணவர்களை ஒருங்கிணைத்து வழி நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை