உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  கோடநாடு காட்சி முனையில் குளிரிலும் பயணியர் கூட்டம்

 கோடநாடு காட்சி முனையில் குளிரிலும் பயணியர் கூட்டம்

கோத்தகிரி: கோத்தகிரி கோடநாடு காட்சி முனையில் மேகமூட்டமான காலநிலையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் காணப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா மையங்களில், கோடநாடு காட்சி முனை முக்கியத்துவம் பெறுகிறது. கோடை சீசன் உட்பட, வார விடுமுறை நாட்களிலும், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் வருகை இப்பகுதியில் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில், மூன்று நாட்களாக, வானம் மேகமூட்டமாகவும், சாரல் மழையுடன் கடும் குளிரான காலநிலை நிலவுகிறது. இதனால், ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்படும் நிலையில், கோடநாடு காட்சி முனையில் பயணிகள் கூட்டம் அதிகரித்திருந்தது. அவர்கள், கடும் குளிரிலும் இயற்கை காட்சிகளை ரசித்து, 'செல்பி' எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை