உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இடைநிற்றல் மாணவர்களை பள்ளியில் சேர்க்க முடிவு

இடைநிற்றல் மாணவர்களை பள்ளியில் சேர்க்க முடிவு

கூடலூர்;கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பது; பள்ளி இடைநிற்றல் மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர்களை சந்தித்து கல்வி முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், போதைக்கு எதிராக பள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது; கிராம ஊராட்சிகளில் ஒவ்வொரு வார்டுகளிலும் குழந்தை பாதுகாப்பு கமிட்டி அமைத்து செயல்படுவது' என, தீர்மானிக்கப்பட்டது. அலுவலக சமூக பணியாளர் தவமணி, அரசு ஊழியர்கள். தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை