மேலும் செய்திகள்
ராணுவ போர் தளவாட பொருட்களுக்கு ஆயுத பூஜை
9 hour(s) ago
கோவிலில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சி அசத்தல்
9 hour(s) ago
காமராஜர் சதுக்கத்தில் காந்தி ஜெயந்தி விழா
9 hour(s) ago
கூடலூர்: முதுமலையில், வளர்ப்பு யானைகள் அணி வகுத்து நிற்க,தேசிய கொடி ஏற்றி சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடினர்.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில், ஆண்டுதோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களில், வளர்ப்பு யானைகள் அணிவகுத்து நிற்க, தேசியக் கொடியேற்றி கொண்டாடி வருகின்றனர். அதன்படி, தெப்பக்காடு யானைகள் முகாமில், இன்று, காலை, சுதந்திர தின விழா சிறப்பாக நடந்தது. விழாவில் வளர்ப்பு யானைகள் வரிசையாக அணி வகுத்து நிற்க, அதன் மீது பாகன்கள் தேசிய கொடியை ஏந்தி அமர்ந்திருந்தனர். வன ஊழியர்கள் முன்னாள் அணிவகுத்து நின்றனர். முதுமலை துணை இயக்குனர் வெங்கடேஷ் பிரபு தேசிய கொடி ஏற்றினார். அப்போது, வன ஊழியர்கள் மரியாதை செலுத்த, வளர்ப்பு யானைகளும் தும்பிக்கையை உயர்த்தி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்வு, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.விழாவில் வனச்சரகர்கள் பரத், சிவக்குமார், விஜயன், வன ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் யானை பாகன்கங்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago