உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வறட்சியின் தாக்கம் அதிகரிப்பு: குன்னூரில் பரவும் வனத்தீ

வறட்சியின் தாக்கம் அதிகரிப்பு: குன்னூரில் பரவும் வனத்தீ

குன்னுார்;குன்னுார் ரயில்வே குடியிருப்பில் ஏற்பட்ட வனத்தீயை தீயணைப்புத் துறையினர் அணைத்தனர்.குன்னுார் பகுதிகளில் வறட்சியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், பல இடங்களிலும் வனத்தீ ஏற்பட்டு வருகிறது.கடந்த ஒரு வாரத்தில் மட்டும் குன்னுார் பந்துமை, வண்டிச்சோலை உட்பட, 10 இடங்களில் ஏற்பட்ட வனத் தீயை தீயணைப்புத்துறையினர் அணைத்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குன்னுார் ரயில் நிலைய குடியிருப்பு அருகே சோலை பகுதியில் வனத் தீ ஏற்பட்டது. தகவலின்பேரில் நிலைய அலுவலர் குமார் தலைமையில் முன்னணி தீயணைப்பாளர்கள் சுப்ரமணி, கண்ணன் உட்பட தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைத்தனர். குன்னுார் மலைப்பாதைகளில் வறட்சியின் தாக்கத்தால் வனத்தீ ஏற்படும் அபாயம் உள்ளதால் தீத்தடுப்பு கோடுகள் அமைக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை