மேலும் செய்திகள்
நலம் காக்கும் மருத்துவ முகாம் 2,875 பேருக்கு பரிசோதனை
1 hour(s) ago
ஊட்டியில் எஸ்.ஐ.ஆர்., எதிர்ப்பு ;த.வெ.க., ஆர்ப்பாட்டம்
1 hour(s) ago
இன்ஸ்பெக்டர் துாக்கிட்டு தற்கொலை
1 hour(s) ago
கூடலூர்: கூடலூர், ஊசிமலை காட்சி முனைக்கு, நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டதால் சுற்றுலா பயணியர் அதிருப்தி அடைந்துள்ளனர். கூடலூர் -- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில், கூடலூரில் இருந்து, 9 கி.மீ., தொலைவில் ஊசிமலை காட்சிமுனை அமைந்துள்ளது. உள்ளூர் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா சுற்றுலா பயணியர் ஊசிமலை காட்சி முனைக்கு அதிகளவில் வருகை தருகின்றனர். சுற்றுலா பயணியருக்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு, 25 ரூபாய், சிறியவர்களுக்கு, 15 ரூபாய் வசூல் செய்து வந்தனர். தற்போது, பெரியவர்களுக்கு, 40 ரூபாய், சிறியவர்களுக்கு 20 ரூபாய் என, கட்டணம் உயர்த்தி உள்ளனர். சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'இந்த நுழைவு கட்டண உயர்வால், குடும்பத்துடன் வருபவர்கள் கடும் சிரமப்படுகின்றனர். நுழைவு கட்டணத்தை குறைக்க வேண்டும்.' என்றனர். வனத்துறையினர் கூறுகையில், 'நுழைவு கட்டணத்துக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டுள்ளதால் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.' என்றனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago