உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரி வணிகர் சங்க பேரவை குன்னுாரில் நிர்வாகிகள் கூட்டம்

நீலகிரி வணிகர் சங்க பேரவை குன்னுாரில் நிர்வாகிகள் கூட்டம்

குன்னுார்;குன்னுார் மார்க்கெட் பகுதியில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, மாநில துணை தலைவர் தாமஸ் தலைமை வகித்தார்.நீலகிரி மாவட்ட தலைவர் முகமது பாரூக், செயலாளர் குலசேகரன், இணை செயலாளர்கள் ராஜா முகமது, ரசாக், முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், 'மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பை, குன்னுார் பகுதியில் வலிமையாக செயல்படுத்துவது ; 10 பேர் கொண்ட குன்னுார் வணிகர்கள் ஒருங்கிணைப்பு குழுவை ஏற்படுத்துவது ; புதிய உறுப்பினர்களை சேர்த்த பிறகு நிர்வாகிகள் தேர்வு செய்வது; குன்னுார் வியாபாரிகளின் தேவைகளுக்காக பேரமைப்பு உறுதுணையாக நிற்பது,' என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.கூட்டத்தில், மாவட்ட பொருளாளர் லியாகத் அலி, கூடுதல் செயலாளர் பாதுஷா, கவுரவ தலைவர் சாதிக், துணைத் தலைவர் கேசவன், அக்பர், நடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை குன்னுார் பெட்போர்டு வியாபாரிகள் சங்க தலைவர் சேகர் உட்பட பலர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்