மேலும் செய்திகள்
நல் நுாலகர் விருது
13-Dec-2025
வெலிங்டன் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை
13-Dec-2025
அணைகள் நீர்மட்டம்
13-Dec-2025
கூடலுார்:முதுமலை மசினகுடி பகுதியில் வனத்துறையினர், மரங்களில் பரண் அமைத்து வனத்தீயை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் தொடரும் வறட்சியின் தாக்கத்தால், வனப்பகுதி பசுமை இழந்துள்ளது. வன விலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. தொடரும் வறட்சியில் வனத்தீ அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க, தீ தடுப்பு கோடுகள் அமைத்து வருகின்றனர். மேலும், வனத்தீ ஏற்படுவதை தடுக்க கண்காணிப்பு பணியிலும் வன ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.இந்நிலையில், மசினகுடி வனப்பகுதியில் உயரமான இடங்களில் உள்ள மரங்களில், பரண் அமைத்து வனத்தீயை கண்காணிக்கும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.பைனாகுலர் போன்ற தொலைநோக்கி கருவிகளை பயன்படுத்தி, வெகு துாரத்தில் தீப்பற்றினாலும் உடனே கண்டறிய முடியும்.வனத்துறையினர் கூறியதாவது:மரங்களில் பரண் அமைத்து, வனத்தில் தீ கண்காணிப்பு பணிகளை மேற்கொள்கிறோம். இதன் மூலம், வனப்பகுதியில் தீ ஏற்பட்டால், எளிதாக அறிந்து, அந்த இடத்திற்கு விரைந்து சென்று கட்டுப்படுத்த முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
13-Dec-2025
13-Dec-2025
13-Dec-2025