| ADDED : ஜன 24, 2024 12:56 AM
அன்னூர்;சாளையூரில் குன்றின் மேல் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பழனி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்தாண்டு கும்பாபிஷேக விழா நடந்தது. இதையடுத்து முதலாம் ஆண்டு பெருவிழா நடந்தது. காலை 9:00 மணிக்கு வேள்வி பூஜை நடந்தது. இதையடுத்து பழனி ஆண்டவருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது.திருக்குட நீராட்டுக்குப் பிறகு, மதியம் பால், தயிர், நெய், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால், பழனி ஆண்டவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.பேரொளி வழிபாடு நடந்தது. மதியம் 2,000-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. செஞ்சேரிமலை ஆதீனம், முத்து சிவராம சாமிகள், அவிநாசி சித்தர்பீட சின்னசாமி சாமிகள், வார வழிபாட்டு அறக்கட்டளை நிர்வாகிகள், விழா குழுவினர் பங்கேற்றனர்.சிரவை ஆதீன அருட்பணி மன்றத்தினர், வேள்வி வழிபாடுகளை நடத்தினர்.