உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நடைபாதை இரும்பு தடுப்புகளில் பூந்தொட்டிகள்

நடைபாதை இரும்பு தடுப்புகளில் பூந்தொட்டிகள்

கூடலுார்;கூடலுார் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள நடைபாதை தடுப்புகளில் பூந்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.கூடலுார் நகர வணிகர் சங்கம், கூடலுார் வேலி ரோட்டரி கிளப் சார்பில், பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள நடைபாதை, இரும்பு தடுப்புகளில் பூந்தொட்டிகள் வைத்து பராமரிக்கும் பணி நேற்று துவங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் ஜான்சன் தலைமை வகித்தார்.தொடர்ந்து, தடுப்புகளில் பூந்தொட்டிகள் வைக்கும் பணியை, கூடலுார் ஆர்.டி.ஓ., செந்தில்குமார், டி.எஸ்.பி., வசந்த்குமார், வணிகர் சங்க மாநில துணைத் தலைவர் தாமஸ், நகர் வணிகர் சங்க தலைவர் அப்துல் ரசாக், ரோட்டரி சங்கம் முன்னாள் தலைவர் ராஜகோபால் ஆகியோர் துவக்கி வைத்தனர். தொடர்ந்து, பஸ் ஸ்டாண்ட் எதிரே, நடைபாதையில் உள்ள இரும்பு தடுப்புகளில் பூந்தொட்டிகள் வைக்கப்பட்டது.'பூந்தொட்டிகளை தொடர்ந்து பராமரிக்கவும், நகரை மேலும், அழகு படுத்தவும், நகருக்குள் கால்நடைகள் வராமல் தடுக்கவும் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது.நிகழ்ச்சியில், வணிகர் சங்க நிர்வாகிகள் ரோட்டரி சங்க உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ