உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  ஆடுகளை வேட்டையாடும் சிறுத்தை: வனத்துறை நேரில் ஆய்வு

 ஆடுகளை வேட்டையாடும் சிறுத்தை: வனத்துறை நேரில் ஆய்வு

பந்தலுார்: பந்தலுார் அருகே கூவமூலா பகுதியில், சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். பந்தலுார் அருகே கூவமூலா குடியிருப்புகள், தனியார் தேயிலை தோட்டம் மற்றும் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அடிக்கடி சிறுத்தைகள் நடமாடி வருவதை, இப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இந்நிலையில், தனியார் தேயிலை தோட்டத்தை ஒட்டி குடியிருக்கும் சாந்தி என்பவரின் ஆடுகளை சிறுத்தை வேட்டையாடி சென்றது. இந்த பகுதியில் ஒற்றையடி நடைபாதை உள்ள நிலையில், பள்ளி மற்றும் அங்கன்வாடி செல்லும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், வனச்சரகர் சஞ்சீவி தலைமையிலான வனக்குழுவினர், அப்பகுதி மக்களிடம், சிறுத்தை நடமாட்டம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். வனத்துறையினர் கூறுகையில், ' இங்குள்ள தோட்டங்களில் புதர் செடிகளை வெட்டி அகற்ற வேண்டும். குழந்தைகளை தனியாக வெளியே செல்ல அனுமதிக்க கூடாது. சிறுத்தை நடமாட்டம் குறித்து ஏதேனும் தெரிய வந்தால் உடனடியாக, வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை