உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  110 பழங்குடியினர் வீடுகளுக்கு இலவச மின் இணைப்பு: கலெக்டர்

 110 பழங்குடியினர் வீடுகளுக்கு இலவச மின் இணைப்பு: கலெக்டர்

கூடலுார்: முதுமலை, திருப்பக்காடு லைட்பாடி கிராமத்தில் உள்ள, 110 பழங்குடியினர் வீடுகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. முதுமலை புலிகள் காப்பகம், லைட்பாடி கிராமத்தில், 'குறிப்பாக பாதிக்கக்கூடிய பழங்குடியினர் குழு (பி.வி.டி.ஜி.,)' என்ற திட்டத்தின் கீழ், புதிதாக கட்டப்பட்ட ஐந்து பழங்குடியினர் வீடுகளுக்கு, இலவச மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கூடலுார் மின் துறை கோட்ட பொறியாளர் முத்துக்குமார் வரவேற்றார். நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்து பேசுகையில்,''நீலகிரி மின்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் வீடுகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. லைட்பாடி கிராமத்தில் உள்ள, 105 வீடுகளுக்கு ஏற்கனவே மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 5 வீடுகளுக்கு தற்போது மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீலகிரியில், 38 லட்சம் ரூபாய் செலவில் 1,010 பழங்குடியின வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது,'' என்றார். தொடர்ந்து, வீடுகளுக்கான மின் இணைப்பை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு மின் கணக்கீட்டு அட்டைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் மின்துறை மேற்பார்வை பொறியாளர் சந்தானநாயகி, செயற் பொறியாளர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் தமிழரசன், தெப்பக்காடு வனச்சரகர் சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உதவி பொறியாளர் அப்துல்மஜீத் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை