| ADDED : ஜன 10, 2024 11:49 PM
:அன்னூர் : அன்னூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.போக்குவரத்து கழகங்களை, தனியார் மயமாக்கக்கூடாது. 20 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டிய 8 ஆயிரம் பேரின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும்.ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும். பண பயன்களை விரைந்து வழங்க வேண்டும். நான்காண்டுகளில் வழங்க வேண்டிய சம்பள உயர்வு ஐந்தாண்டு ஆகியும் வழங்கப்படவில்லை. உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அன்னூர் பஸ் ஸ்டாண்டில், போக்குவரத்து தொழிலாளர்கள், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் நேற்று மதியம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சி.ஐ.டி.யு., ஏ.டி.பி., ஏ.ஐ.டி.யு.சி., ஆகிய தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தேர்தலின் போது வாக்குறுதி அளித்த தமிழக முதல்வரே வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றுங்கள் என்று கோஷங்கள் எழுப்பினர். ஊழியர்கள் மறியலில் ஈடுபடலாம் என தகவல் வெளியானதை அடுத்து கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.