உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசு பஸ் கண்டக்டர் மரணம்

அரசு பஸ் கண்டக்டர் மரணம்

கோத்தகிரி : கோத்தகிரியில் தவறி விழுந்து, அரசு போக்குவரத்து கழக கண்டக்டர் இறந்தது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கோத்தகிரி சுண்டட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபு, 40. இவருக்கு, திருமணமாகி மனைவி மற்றும் எட்டு வயதில் மகன், இரண்டு மாதத்தில் பெண் கை குழந்தை உள்ளனர். இவர், அரசு போக்கு வரத்து கழக கோத்தகிரி கிளையில் கண்டக்டராக பணி புரிந்து வந்தார். அரசு போக்குவரத்து ஊழியர்கள், போராட்டம் நடத்திவரும் நிலையில், நேற்று முன்தினம் பிரபு, வழக்கம்போல் பணியில் ஈடுபட்டுள்ளார்.பகல், 3:00 மணியளவில் பணியை முடித்த அவர், பஸ் நிலையம் - மார்க்கெட் இடையே, சாலையோர தடுப்புச்சுவரின் மேல் அமர்ந்த போது, 15 அடி உயரத்தில் இருந்து, திடீரென தவறி விழுந்துள்ளார். தலையில் பலத்த காயம் அடைந்து, அங்கேயே இறந்துள்ளார்.கோத்தகிரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின், உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி