உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  முற்றுகையிட்ட சுற்றுலா பயணிகள்; சாலைகளில் கடும் வாகன நெரிசல்

 முற்றுகையிட்ட சுற்றுலா பயணிகள்; சாலைகளில் கடும் வாகன நெரிசல்

ஊட்டி: ஊட்டிக்கு வார விடுமுறை நாட்களில், 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகளின் வருகை தருவது வழக்கம். தற்போது, பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை மற்றும் ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக, நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை ஊட்டி நகரில் அதிகரித்தது. அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா மற்றும் தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலா மையங்களில், கேரளா, கர்நாடகா உட்பட சமவெளி பகுதியில் இருந்து, சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்தனர். இதனால், ஊட்டி சேரிங்கிராஸ், எட்டின்ஸ் சாலை, படகு இல்லம், மத்திய பஸ் நிலையம் மற்றும் கோத்தகிரி சாலைகளில், சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்துதால் நெரிசல் ஏற்பட்டது. இதனை சீரமைக்க போலீசார் திணறினர். இன்னும் சில நாட்கள் கூட்டம் இருக்கும் என்பதால், நகரில் கூடுதல் போலீசாரை பணியில் அமர்த்துவது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்