உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பால் கொள்முதல் விலை உயர்வு ; கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

பால் கொள்முதல் விலை உயர்வு ; கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையம் : தமிழக அரசு அறிவித்த, பால் கொள்முதல் விலை உயர்வு, வழங்காததை கண்டித்து, தமிழக விவசாயிகள் சங்கம், பால் கூட்டுறவு சங்க கொள்முதல் நிலையங்கள் முன், கறுப்புக்கொடி கட்டி ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்துள்ளது.இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேணுகோபால் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:பால் கொள்முதல் விலை, லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்தி அறிவித்து, அது கடந்த மாதம், 18ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று, கடந்த மாதம், 13ம் தேதி தமிழக முதல்வர் அறிவித்தார். லிட்டருக்கு மூன்று ரூபாய் விலை உயர்வு அறிவிப்பு, குறைவாக இருந்தாலும், அதற்கு தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், வரவேற்று நன்றி தெரிவித்தோம். ஆனால் அந்த குறைவான விலை உயர்வு கூட, இன்று வரை நடைமுறைக்கு வரவில்லை. அதனால் பால் உற்பத்தியாளர்களுக்கு ஏமாற்றமும், வேதனையும் அளிக்கிறது.எனவே அரசு அறிவித்த விலை உயர்வு அறிவிப்பை, விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும். பொங்கல் பண்டிகைக்குள் நடைமுறைப்படுத்தவில்லை என்றால், ஆவின் பால் கொள்முதல் நிலையங்கள் முன், கறுப்புக்கொடி கட்டி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு மாநிலத் தலைவர் அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்