உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / 18 ஆயிரம் வாகனங்கள் ஆய்வு ரூ. 82 லட்சம் அபராதம்; வசூல் வட்டார போக்குவரத்து அலுவலகம் நடவடிக்கை

18 ஆயிரம் வாகனங்கள் ஆய்வு ரூ. 82 லட்சம் அபராதம்; வசூல் வட்டார போக்குவரத்து அலுவலகம் நடவடிக்கை

ஊட்டி;நீலகிரியில் கடந்தாண்டில் மட்டும், 18 ஆயிரம் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, 82 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. நீலகிரி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வாகன வரி, தகுதிச்சான்று உள்ளிட்டவைகள் முறையாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விதிமீறல் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்படி, கடந்த ஆண்டு ஜன., மாதம் முதல் டிச., மாதம் வரை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும், 18 ஆயிரத்து 622 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. அதில், வரி செலுத்தாமலும், தகுதிச்சான்று பெறாமல் இயக்கப்பட்டு வந்த, 304 வாகனங்கள் பிடிக்கப்பட்டன. 3,264 வாகனங்களுக்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. மேலும், கடந்த ஆண்டு ஜன., மாதம் முதல் டிச., மாதம் வரை வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம், 18,622 வாகனங்களை சோதனை செய்தனர். அதில், வரி மற்றும் அபராத தொகையாக, 82 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளை காட்டிலும் இந்த அபராத தொகை அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் கூறுகையில், ''கடந்தாண்டில் மட்டும், 18 ஆயிரம் வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டது. அபராத தொகையாக, 82 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. வாகன உரிமையாளர் கள் வாகன வரிகளை முறையாக செலுத்துவதுடன், தகுதி சான்று முறையாக பெற்று விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். கடந்தாண்டில் மட்டும், 82 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ