| ADDED : டிச 26, 2025 06:50 AM
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி பாலூர் பகுதியில் பழங்குடியினத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 26. இவர், கடந்த 7ம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த ராமராஜன், 50, என்பவர் மூலிகைகளின் வேர் திருடியதாக குற்றம்சாட்டி தாக்கியுள்ளார். படுகாயமடைந்த மணிகண்டனை அப்பகுதி மக்கள், கோட்டத்தறை மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீசார் கூறுகையில்,' பழங்குடியினரிடம் இருந்து மூலிகை வேர்கள் சேகரித்து விற்பனை செய்யும் ராமராஜன் என்பவர், சேகரித்த மூலிகை வேர்களை மணிகண்டன் திருடியதாக கூறி போலீசில் புகார் அளித்திருந்தார். தொடர்ந்து விசாரணை நடத்தி மூலிகை வேர்களை கண்டுபிடித்து ராமராஜிடம் கொடுத்து பிரச்னையைப் முடித்து வைத்தோம். இதற்குப் பிறகு தான் ராமராஜ், மணிகண்டனை தாக்கியுள்ளார். ராமராஜன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறோம்,' என்றனர்.