மேலும் செய்திகள்
தேவர்சோலை அருகே மீண்டும் புலி தாக்கி பசு மாடு பலி
23 hour(s) ago
ஊட்டி: ஊட்டி நஞ்சநாடு கிராமத்தில் 'லக்கிச்சா' எனப்படும் லட்சதீப திருவிழா கோலாகலமாக நடந்தது. கார்த்திகை தீபம் திருநாளை ஒட்டி, நீலகிரியில் உள்ள பல கிராமங்களில் கோவில் மற்றும் வீடுகளில் தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அதன் ஒருபகுதியாக, படுக சமுதாய மக்கள் வசிக்கும் கிராமங்களில், 'லக்கிச்சா' என்ற பெயரில், லட்ச தீபா சிறப்பாக கொண்டாடப்படு கிறது. குறிப்பாக, ஊட்டி நஞ்சநாடு கிராம மைய பகுதியில் அமைந்துள்ள கோவில் கல்துாணில், நேற்று மாலை, 6:00 மணிக்கு நெய்தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. விழாவில், 'கிராம மக்கள் மற்றும் உறவினர்கள்' என, அனைவரும் கலாசார உடை அணிந்து, பாரம்பரிய நடனம் ஆடி மகிழ்ந்தனர். தொடர்ந்து, காணிக்கை செலுத்தி வழிப்பட்டனர். இவ்விழாவை ஒட்டி, நஞ்சநாடு கிராமம் திருவிழா கோலம் பூண்டிருந்தது. அதேபோல, அன்னமலையில் கோவில் ஸ்தாபகர் குரு கிருஷ்ணாநந்தாஜி தலைமையில், இளைய மடாதிபதி வடிவேல் சுவாமி முன்னிலையில் கோவில் மையப்பகுதியில் தீபங்கள் ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதேபோல, கிராம கோவில்களிலும் தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
23 hour(s) ago