மேலும் செய்திகள்
ரூ. 1.30 கோடிமதிப்பீட்டில் சாலை பணி
1 hour(s) ago
நீலகிரியில் 3,402 பேருக்கு மகளிர் உரிமை தொகை
1 hour(s) ago
மணியட்டி சாலையில் சிறுத்தை நடமாட்டம்
1 hour(s) ago
காவல்துறை வாகனங்கள் டி.ஐ.ஜி., ஆய்வு
1 hour(s) ago
பந்தலுார் : பந்தலுார் அருகே சுல்தான் பத்தேரி அருகே, மலபார் அணில் ஒன்று மூன்று பேரை கடித்ததால் பாதிப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்ட எல்லையை ஒட்டி கேரளா மாநிலம் வயநாடு உள்ளது. அங்கு சுல்தான் பத்தேரி அருகே இருளாம் என்ற இடத்தில், கடந்த ஒரு வாரமாக மலபார் அணில் ஒன்று, குடியிருப்பு பகுதிகளில் முகாமிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.இந்நிலையில், நேற்று காலை சீமந்தினி, 60, என்பவர் வீட்டில் சமைத்து கொண்டிருந்தார். வீட்டிற்குள் புகுந்த மலபார் அணில் அவர் தலை மற்றும் கழுத்து பகுதிகளில் கடித்தது. இவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பக்கத்து வீட்டுச் சேர்ந்த பிந்து,40, என்பவரையும் கடித்ததில் காயம் அடைந்தார்.மேலும், அந்த வழியாக வந்த வாசு என்பவரையும் கடித்தது. மூவரையும் சுல்தான் பத்தேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு மலபார் அணிலை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.வனத்துறையினர் கூறுகையில்,' இப்பகுதியில் இரவு நேரத்தில் மக்கள் செல்லும் போது, மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். அணில் சிறியதாக இருப்பதால், தெரியாது. அதனால், டார்ச் எடுத்து செல்ல வேண்டும். அணிலை பார்த்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தர வேண்டும்,' என்றனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago